தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மாணவர்களின் தன்னம்பிக்கைக்கு கமல் பாராட்டு

DIN


மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை எல்லோருக்கும் இருந்தால் நாடு பன்மடங்கு முன்னேறும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னை அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள சிறுமலர் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியின் (லிட்டில் ஃபிளவர்ஸ் கான்வென்ட்) மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் குழந்தைகள் தினத்தை கமல்ஹாசன் புதன்கிழமை கொண்டாடினார்.மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை கமல்ஹாசன் அமர்ந்து 
கவனித்தார். 
பார்வையற்ற ஒரு மாணவி ப்ரெய்லி முறையில் புத்தகங்கள் அச்சிட உதவும் சாதனங்களை வாங்கித் தருமாறு கமலிடம் உதவி கோரினார். அதை வாங்கித் தருவதாகவும் கமல் கூறினார்.
மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியது: இப்போது நான் சந்திக்கும் மாணவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை அனைவருக்கும் இருந்தால் நமது நாடு இன்னும் பன்மடங்கு முன்னேறும். 
நான் இந்த பள்ளியின் முன்னாள் மாணவன். இங்குதான் நான் ப்ரெய்லி மற்றும் சைகை மொழியையும் கற்றேன்.
ப்ரெய்லி முறையில் புத்தகங்களை அச்சடிக்கும் சாதனங்களை மாணவி கோரினார். அவை மும்பையில் கிடைக்கும் என்று அறிவேன். அவை உங்களைக் கட்டாயம் வந்தடையும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT