தமிழ்நாடு

கஜா புயல் பாதிப்பு: தமிழக மேலாண்மை வாரியத்தின் நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் பாராட்டு

DIN

புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது

பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனிடையே புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைவுப்படுத்த மின்துறை, சுகாதாரத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அரசு மேற்கொள்ளும் மீட்புப்பணிகளுடன் திமுக தொண்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT