தமிழ்நாடு

பட்டாசு வழக்கில் தமிழக அரசு மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

DIN


பட்டாசு தொடர்பான வழக்கில் தமிழக அரசு மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யும் என்றார் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
சிவகாசியில் 65 ஆவது கூட்டுறவு சங்க வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமை வகித்தார். இதில், சிறு வணிகக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், தொழில் முனைவோர் மகளிர் கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன் உள்பட 1809 பயனாளிகளுக்கு ரூ.10.93 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், 60 சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பரிசு, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவிகள் 60 பேருக்கு பரிசுகளை வழங்கியும் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:
2011 ஆம் ஆண்டிலிருந்து, தற்போது வரை 3,24,195 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 4,34,722 கோடி கடனுதவியும், 99,550 தொழில் முனைவோர் மகளிருக்கு ரூ. 397.65 கோடி கடனுதவியும், 71,486 பணிபுரியும் மகளிருக்கு 392.23 கோடி மதிப்பிலான கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வழியில் நடைபெறும் தமிழக அரசு, பெண்கள் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு பயிர்க் கடன், 282 அம்மா மருந்தகம் மூலம் 20 சதம் தள்ளுபடியில் ரூ.725.86 கோடிக்கு மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியின் சான்று பெறப்பட்டுள்ளது. தொடக்கக் கூட்டுறவு வங்கிகள் மூலம் கிராமத்தினரும் வளர்ச்சிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சி சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: 
பட்டாசு தொடர்பான வழக்கில் தமிழக அரசு மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யும். மாவட்டத்தில் உள்ள பட்டாசுத் தொழிலையும், தொழிலாளர்களையும் அரசு பாதுகாக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT