தமிழ்நாடு

கடைசி படமாக அமைந்தது '96': சின்மயி உருக்கம்

DIN


தமிழ் திரைப்பட டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள பாடகி சின்மயி, தனக்கு கடைசி படமாக அமைந்துவிட்டது '96' என்று சின்மயி உருக்கமாக தெரிவித்துள்ளார். 

சமீபகாலமாக தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது மீ டூ குற்றச்சாட்டு கூறிய சர்ச்சைகளுக்கு ஆளானவர் சின்மயி, சினிமா டப்பிங் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அமெரிக்காவில்  பிரபலமான இசை கச்சேரி சுற்றுப்பயணத்தில் உள்ள பின்னணிப் பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: 

நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக டப்பிங் யூனியனுக்காக சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறப்பட்டு, யூனியனில் எனது உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை டப்பிங் யூனியனில் உறுப்பினர் அல்லாத ஒருவர் எந்தப் படத்துக்கும் டப்பிங் செய்ய முடியாது. நான் எனது சந்தாவை செலுத்தவில்லை என இதனால் உறுப்பினர் அந்தஸ்து ரத்து செய்யப்படும் என எந்தவொரு தகவலும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை. டப்பிங் யூனியனில் இருந்து என்னைத் தூக்கும் முடிவின் முதல் நடவடிக்கையாகத்தான் இது தெரிகிறது. இது நான் எதிர்பார்த்த ஒன்றுதான். 

நான் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அந்தத் தொகையைக் கட்டினாலும், எனது உறுப்பினர் அந்தஸ்து திரும்பக் கிடைக்குமா எனத் தெரியவில்லை. எனினும், இந்த இரண்டு ஆண்டுகளில் எனது சம்பளத் தொகையிலிருந்து 10 சதவிகிதத் தொகையை யூனியன் எடுக்கத் தவறியதில்லை. 

தனக்கு தெரியாமலேயே நீக்கப்பட்ட தனக்கு, தமிழில் '96 தான் எனது கடைசிப் படமாக இருக்கப்போகிறது. டப்பிங் யூனியனின் இந்த நீக்கம் தொடருமேயானால், ஒரு நல்ல படத்துடன் தமிழில் எனது டப்பிங் பயணத்தை முடிப்பது மகிழ்ச்சியே. வருகிறேன்! என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT