தமிழ்நாடு

புயல் பாதித்த பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி உதவி: அமைச்சர் தங்கமணி

DIN


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் தேதி கஜா புயலால் தமிழகத்தின் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கரையோர கிராமங்களில் கடும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் தென்னை, பலா மற்றும் பழமை வாய்ந்த மரங்கள் சாய்ந்தன. லட்சக்கணக்கான மின் கம்பங்கள் சரிந்தன, பல கிராமங்கள், குக்கிராமங்கள் உட்பட சிறு ஊர்கள் இருளில் மூழ்கியுள்ளன. பட்டுக்கோட்டை, மன்னார்குடி, தலைஞாயிறு உள்ளிட்ட பல கிராமங்களில் இன்னமும் மக்கள் குடிநீர், மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவராண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மின் கம்பங்களை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. மின் இணைப்பு பணிகளும் சீர் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.

இதற்கிடையில், மத்திய அரசு சார்பில் இதுவரை இடைக்கால நிவாரணமாக எந்தவொரு தொகையும் வழங்காமலும், புயல் பாதித்த பகுதிகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்கான எந்த அறிப்பையும் வெளியிடாமல் இருப்பது வேதனையாக உள்ளது. 

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஊரக பகுதிகளில் இன்னும் ஒரு வாரத்தில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். அதிகளவில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT