தமிழ்நாடு

காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்: சுகாதாரத் துறை அமைச்சர்

DIN


காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவற்றின் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
காய்ச்சல், தொற்று நோய்கள் பரவாமலும், இதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுத்திடவும் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சுயமாக மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. மேலும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துக்கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு மாத்திரைகளை வழங்கக் கூடாது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் காய்ச்சல் சிகிச்சை மையமும், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் கருவிகளும் உள்ளன. அனைத்து மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலுக்கான டாமின் புளூ மாத்திரைகள் போதிய அளவில் கையிருப்பு உள்ளன என்றார். இந்த ஆய்வின்போது, மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எட்வின் ஜோ, பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் டாக்டர் ஜெயந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT