தமிழ்நாடு

சேவை வரி விவகாரம்: நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்

DIN


சேவை வரி விவகாரம் தொடர்பான வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜரானார்.
நடிகர் விஷால் வரும் அக்டோபர் 26-ஆம் தேதி மீண்டும் ஆஜராகவில்லை என்றால் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
நடிகர் விஷால் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாத காரணத்தால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சேவை வரித் துறை அதிகாரிகள் அவருக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு சம்மன் அனுப்பினர். இந்த விவகாரம் குறித்து அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் சேவை வரித் துறை சார்பில் விஷால் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஷால் நேரில் ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அவருக்கு வழங்கப்பட்டன. வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவீர்கள் என்றால் சேவை வரித் துறை அனுப்பிய சம்மனுக்கு ஏன் பதிலளிக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க வரும் அக்டோபர் 26-ஆம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். அன்றைய தினம் விஷால் ஆஜராகவில்லை என்றால், வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்து விசாரணையை ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT