தமிழ்நாடு

பக்திக்கு மட்டுமே முக்கியத்துவம்

தினமணி

சபரிமலையில் பக்திக்கு மட்டுமே முக்கியத்துவம்; சமூக செயல்பாட்டாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் அங்கு இடமில்லை என்றார், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
 கன்னியாகுமரியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியது:
 சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசு சிறப்புச் சட்டம் மூலம் தீர்வு காணவேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கை நியாயமானது. இதை மத்திய அரசு நிச்சயமாக பரிசீலிக்கும். சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதில், கேரள அரசு பழிவாங்கும் சிந்தனையுடன் செயல்படுவதாக நினைக்கிறேன். சபரிமலை விவகாரத்தை கேரள அரசு தொடர்ந்து உதாசீனப்படுத்துவது சரியல்ல. சமூக செயல்பாட்டாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் சபரிமலையில் இடமில்லை. பக்திக்கு மட்டும்தான் முக்கியத்துவம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் ஆம் ஆத்மி, காங். பெரும் பின்னடைவு..!

மணிப்பூரில் காங்கிரஸ் முன்னிலை!

2019 மாடலை தொடரும் திமுக, காங்கிரஸ்? ஆந்திரம், கர்நாடகத்தில் தேஜகூ!!

கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். காவலர் சுட்டுத் தற்கொலை!

உத்தரகாண்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

SCROLL FOR NEXT