தமிழ்நாடு

ஊழல் குற்றச்சாட்டு: முதல்வர், துணை முதல்வர் ராஜிநாமா செய்ய வேண்டும்

DIN


ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் செப். 15 முதல் 20-ஆம் தேதி வரை கருத்துரிமை ஜனநாயக உரிமைப் பாதுகாப்புப் பிரசாரம் நடைபெற உள்ளது. ஆயிரம் மையங்களில் நடைபெற உள்ள இந்தப் பிரசாரத்தின் நிறைவு பொதுக்கூட்டம் செப். 21-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகள் குறித்தோ, அமைச்சர்களின் ஊழல்கள் குறித்தோ எதுவும் பேச முடியவில்லை. தமிழக மக்களை சந்திப்பதே குற்றம், கருத்து சொல்வதும் குற்றம் என்று தமிழக அரசு கருதுகிறது.
தமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் வேலுமணி என ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அமைச்சர்களே இல்லை என்ற அளவு ஊழல் புரையோடி உள்ளது. எனவே, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், புறநகர் மாவட்டச் செயலர் சி. ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT