தமிழ்நாடு

செங்கோட்டை கலவரம்: மேலும் 16 பேர் கைது

DIN


திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த மேலும் 16 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டையில் கடந்த 13, 14ஆம் தேதிகளில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது கல்வீச்சு, கலவரம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். கடைகளுக்குத் தீவைப்பு, வாகனங்கள் உடைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முதற்கட்டமாக 6 வழக்குகள் பதியப்பட்டு, 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, போலீஸாரால் எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் 4 வழக்குகள் பதியப்பட்டன. இதுதொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த மேலும் 16 பேரை செங்கோட்டை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. கல்வீச்சு, கலவரம் தொடர்பாக இதுவரை 10 வழக்குகள் பதியப்பட்டு, 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT