தமிழ்நாடு

ஹெல்மெட் கட்டாயம்: சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என உயர் நீதிமன்றம் அதிருப்தி

DIN

சென்னை: ஹெல்மெட் சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து விரிவான அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்தது. அறிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள், அரசு தாக்கல் செய்த பதில் மனு திருப்தியாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். 

மேலும், தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை போக்குவரத்துக் காவலர்கள் முறையாக அமல்படுத்தவில்லை. அரசு உருவாக்கும் சட்டத்தில் இருப்பதையே அமல்படுத்தச் சொல்கிறோம். கட்டாய ஹெல்மெட் என்பதை ஏதோ நீதிமன்றம் பிறப்பிக்கும் சட்டமாக பார்க்கக் கூடாது. காரில் செல்லும் காவல்துறை உயர் அதிகாரிகள் சீட் பெல்ட் அணிவதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இரண்டு பேருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்று உத்தரவிடக் கோரிய வழக்கில், நாளை தீர்ப்பளிக்கப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT