தமிழ்நாடு

தமிழறிஞர் கீ.த.பச்சையப்பன் மற்றும் கருணாநிதி நண்பரான திருவாரூர் கே.செல்வகணபதி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

DIN

தமிழறிஞர் கீ.த.பச்சையப்பன் மற்றும் கருணாநிதி நண்பரான திருவாரூர் கே.செல்வகணபதி ஆகியோரின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
“தமிழறிஞர் கீ.த.பச்சையப்பன் மறைவு”
தனிச்சிறப்பு வாய்ந்த தமிழறிஞரும், மொழிப்போராட்ட வீரருமான புலவர் கீ.த.பச்சையப்பன் அவர்கள் தனது 84வது வயதில் மறைவடைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். வழக்கு ஒன்றிற்காக உயர்நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, செந்தமிழ்ப்புலவர் மரணமடைந்துள்ளார்.

அவர் மறைந்தாலும் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய தொண்டு என்றென்றும் உயிர்த்துடிப்புடன் வாழும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“திருவாரூர் பாரி நாதசுவர கலைஞர் கே.செல்வகணபதி மறைவு”
முத்தமிழறிஞர் தலைவர் கருணாநிதியின் இளமைக்காலம் தொட்டே உற்ற நண்பராக விளங்கியவரும், புகழ் பெற்ற தனித்துவம் வாய்ந்த பாரி நாதசுரம் இசைப்பதில் வல்லவராகத் திகழ்ந்தவரும், திருவாரூர் கு.தென்னனின் சகோதரரும், அரிய கலைஞருமான திருவாரூர் கே.செல்வகணபதி தனது 94ஆம் வயதில் மறைவுற்ற செய்தி ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

கே.செல்வகணபதியின்  மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்தம் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT