தமிழ்நாடு

திருச்சி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக்கு ஒருநாள் முன்பு வழங்கப்பட்ட கணிணி பாடப்புத்தகம்

ENS

எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலியாக அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு ஒருநாள் முன்பு தங்களது கணிணி பாடப்புத்தகத்தைப் பெற்றனர்.

திருச்சியில் 25 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் பதினோராம் வகுப்பு தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் சுமார் 400 பேருக்கு கணிணி பாடப்புத்தகம் வழங்கப்படாமல் இருந்தன.

இதனால் ஆசிரியர்களும், மாணவர்களும் பெரும் இன்னலுக்கு உள்ளானர். இதில் பெரும்பாலான மாணவர்களின் வீடுகளில் கணிணி வசதி கிடையாது என்பதால் அவர்களுக்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. மேலும், வகுப்பு நேரங்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஜெராக்ஸ்களை மட்டுமே வைத்துக்கொண்டு பாடம் நடத்தியுள்ளனர். மாணவர்களும் அதனை தங்கள் நோட்டுப் புத்தகங்களில் எழுதி படித்து வந்தனர்.

புத்தகம் வழங்கப்படாமல் இருந்த அவலநிலை தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து திருச்சி தலைமை கல்வி அதிகாரி எம்.ராமகிருஷ்ணன், தானாக முன்வந்து இவ்விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்டார்.  இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது இதற்கு விரைவில் தீர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செப். 22-ஆம் தேதி கணிணி காலாண்டுத் தேர்வும் நடைபெற இருந்தது. அப்போது தேர்வுக்கு ஓரிருநாள் முன்பாக அனைத்து மாணவர்களுக்கும் கணிணி பாடப்புத்தகம் அளிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக தன்னிடம் எவ்வித புகார்களும் வரவில்லை என்று கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 மாதங்களில் 100 திரையரங்குகள் மூடல்!

ஜார்க்கண்ட் அமைச்சருக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்!

3 மாவட்டங்களில் அதி கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

பாரதிய ஜனதாவில் கால் பங்கு வேட்பாளர்கள் கட்சிமாறி வந்தவர்கள்!

பொய்களால் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ் முயல்கிறது: மோடி!

SCROLL FOR NEXT