தமிழ்நாடு

ஒளிப்பதிவாளர் தர்மா காலமானார்

DIN


ஒளிப்பதிவாளர் தர்மா (52) மாரடைப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
பர்மா தமிழரான இவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். சென்னை அரசு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு கற்ற தர்மா, கைநாட்டு, மைக்கேல்ராஜ், மதுரைக்காரத் தம்பி, ஏழாவது மனிதன் உள்பட 35-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கரண்ட் என்ற படத்துக்காக இவர் தேசிய விருது பெற்றுள்ளார். சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் தர்மா வசித்து வந்தார். இவரது உடல் மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது. தொடர்புக்கு: 98843 31103.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT