தமிழ்நாடு

ஆதார் எண்ணால் தனி மனித சுதந்திரம் பாதிக்கக்கூடாது: கமல்ஹாசன்

DIN

ஆதார் எண்ணால் தனி மனித சுதந்திரம் பாதிக்கக்கூடாது: கமல்ஹாசன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னை வந்துள்ள ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
இந்தியாவில் சில முன்னோடி திட்டங்கள் கூட நவீன் பட்நாயக்கிடம் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் பார்த்து பொறாமைபடும் அளவிற்கு ஒடிசா நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 

திறமைக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுத்தாக வேண்டும். ஆனால் அதனை ஜாதி அடிப்படையில் மறுத்திவிட முடியாது. ஆதார் எண்ணால் தனி மனித சுதந்திரம் பாதிக்கக்கூடாது. அரசு மக்களுக்கு செய்யும் திட்டங்களை வரவேற்கலாம். 

ஆனால் தனிமனித சுதந்தரம் பாதிக்கக்கூடாது. பெட்ரோல், டீசல் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். கிராம பஞ்சாயத்தை மக்களிடம் பிரபலப்படுத்தியது மக்கள் நீதி மய்யம்தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT