தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்.பி. மனைவி கொலை: மகனை தேடும் தனிப்படை போலீஸார்

DIN

சென்னையில் அதிமுக முன்னாள் எம்.பி.யின் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருக்கும் மகனை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகர் 6-ஆவது அவென்யூவில் முன்னாள் எம்.பி., குழந்தைவேலு குடும்பத்துடன் வசித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைவேலு காலமாகிவிட்ட நிலையில், குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் (63) மட்டும் அங்கு தனியாக வசித்து வந்தார். லண்டனில் படித்து வந்த குழந்தைவேலுவின் மகன் பிரவீன் (35) கடந்த மாதம் இங்கு வந்தார். தாய் ரத்தினத்துக்கும், பிரவீனுக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரத்தினம் திருப்பூரில் வசிக்கும் தனது மகள் சுதாவை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு, பிரவீன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் அந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுதா, இது குறித்து துரைப்பாக்கத்தில் உள்ள உறவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் உடனே ரத்தினம் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த அவர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ரத்தினம் கை, கால் கட்டப்பட்ட நிலையில், வாயில் காகிதம் திணிக்கப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள், ரத்தினம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சாஸ்திரிநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் பிரவீனை தேடி வருகின்றனர். பிரவீனை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், சொத்துப் பிரச்னையின் காரணமாக ஏற்பட்ட தகராறில் பிரவீன், தாய் ரத்தினத்தை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT