தமிழ்நாடு

முதுகுளத்தூரில் இறந்ததாகக் கூறப்பட்டவர் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு

தினமணி

முதுகுளத்தூரில் உயிருடன் இருப்பவரை இறந்துவிட்டதாகக் கூறியதால், வாக்கு சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.      

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெரு இடையர்பாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் உமர் கத்தாப் மகன் அசன் மைதீன் (47). இவர், முதுகுளத்தூரில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இப்பகுதியிலுள்ள 9 ஆவது வார்டில் இவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வாக்குச் சீட்டு நகல் இருந்துள்ளது.      

எனவே, முதுகுளத்தூரில் மறவர் தெருவில் உள்ள பெண்கள் விடுதி வாக்கு சாவடியில் நண்பகல் 12 மணிக்கு வாக்களிக்க அசன் மைதீன் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த தேர்தல் அலுவலர்கள், அசன் மைதீனிடம் நீங்கள் இறந்துவிட்டதாக உங்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அசன் மைதீன், உயிருடன் உள்ளவரை எப்படி இறந்ததாகக் கூறுவீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.    

பின்னர், முதுகுளத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, காவல் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்தார். இதனால், சுமார் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நடைபெறாமல் தாமதமானது.       இது குறித்து அசன் மைதீன் கூறுகையில், கடந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தேன்.

தற்போது, இறந்துவிட்டதாகக் கூறுகின்றனர். உயிருடன் இருக்கும்போது எவ்வாறு இறந்ததாகக் கூறலாம் என்றார்.      இதையடுத்து, காவல் நிலைய ஆய்வாளர் கலையரசன், தேர்தல் முடிந்த பிறகு வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று  இதற்கான தகவலை பெறலாம் எனத் தெரிவித்ததை அடுத்து, அவர் வாக்களிக்காமல் அங்கிருந்து சென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT