தமிழ்நாடு

பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள் வேதனைக்குரியவை: அதிமுக அறிக்கை

DIN

பொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள் வேதனைக்குரியவை என்று  அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
18.4.2019 அன்று அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், பொன்பரப்பி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையிலும்; புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டத்தில் சமூக வலைதளம் வாயிலாக, ஒரு சமூகத்தைப் பற்றி தவறான செய்தி பரப்பப்பட்டதன் காரணமாக, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னையிலும், மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உடனடியாகத் தலையிட்டு அங்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. 

நிலைமை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஏற்பட்ட இந்த இரு சம்பவங்களும் வேதனைக்குரிய ஒன்றாகும். இவ்விரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையின் கீழ் சம்பந்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த தலைவர்களை அரசு அதிகாரிகள் தொடர்புகொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையும் எடுத்து வரும் நடவடிக்கைகள் அவ்வப்போது தெரியவருகிறது. 

அமைதி காக்க அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், இச்சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT