தமிழ்நாடு

அமமுகவை அரசியல் கட்சியாக பதியக் கோரி டிடிவி தினகரன் மனு

DIN


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை (அமமுக) அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அமமுகவுக்கு சின்னம் பெறுவது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அமமுகவை கட்சியாகப் பதிவு செய்யத் தயாராக இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. அதை
யடுத்து அமமுகவை சுயேச்சையாகக் கருதி பொதுச் சின்னம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார். 
இந்நிலையில், டிடிவி தினகரன் சார்பில் அவரது வழக்குரைஞர்கள் ராஜா செந்தூர் பாண்டியன், அமித் ஆனந்த் திவாரி உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்துக்கு திங்கள்கிழமை சென்று, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தனர். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட பரிசுப் பெட்டி பொதுச் சின்னத்தை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT