தமிழ்நாடு

முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு 

சென்னையில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதனன்று திறந்து வைத்தார்.

DIN

சென்னை: சென்னையில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதனன்று திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி,  முரசொலி நாளிதழ் அலுவலகத்தில் அவரது உருவச்சிலையினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி புதன் மாலை நடைபெற்றது.  

இந்த விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார். திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்புரை நிகழ்த்தினார். புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து, திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். 

வரவேற்புரையைத் தொடர்ந்து  கருணாநிதியின் சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

அவர் திறந்து வைத்த சிலையானது அமர்ந்த நிலையில் கருணாநிதி எழுதுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு முடிந்த பின்னர் சென்னை மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்துகிறார்.

பின்னர் இந்த தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டமானது ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் இரவு நடைபெற உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT