தமிழ்நாடு

டெங்கு: கண்காணிப்பு  நடவடிக்கைகள் தீவிரம்

DIN

கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருவதால் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத் துறையினர்  ஈடுபட்டுள்ளனர்.

பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவக் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

"ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு நாடு முழுவதும் இதுவரை  7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தமிழகத்தில் மட்டும்  கடந்த 7 மாதங்களில் 1, 200-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால், டெங்கு காய்ச்சல் தீவிரமடையலாம் என அஞ்சப்படுகிறது. 

கடந்த சில நாள்களில் சென்னையில் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை நீரை தேங்கவிடக் கூடாது என்று அறிவுறுத்தி, விழிப்புணர்வு பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT