தமிழ்நாடு

வில்வராயநல்லூர் கிராமம் ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்களால் தத்தெடுப்பு

DIN


வில்வராயநல்லூர் கிராமத்தை அபெக்ஸ் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியா நாட்டு சமூக ஆர்வலர்கள்  தத்தெடுத்தனர். 
வில்வராயநல்லூரில் துரைசாமி பெருநோக்கு சமூக கல்வி மன்றம் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லம், சிறுவர்கள் இல்லம், தொடக்க, உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இயங்கி வருகிறது. இந்த அமைப்புகளுக்கு உறுதுணையாக சென்னை அபெக்ஸ் இந்தியா நிறுவனமும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. 
இந்நிலையில், அபெக்ஸ் இந்தியா நிறுவனத்தின் சார்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்  இயான் வில்லி ஓட்ஸ் மற்றும் அவரது மனைவி கிரீஸ் ஓட்ஸ்  ஆகியோர் செவ்வாய்க்கிழமை வில்வராயநல்லூர் கிராமத்துக்கு நேரில் வந்தனர். அவர்களுக்கு துரைசாமி பெருநோக்கு சமூக, கல்வி மன்ற நிறுவன தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
 இந்நிகழ்ச்சியில்  நிறுவனத் திட்ட இயக்குநர் ராதிகா கிருஷ்ணமூர்த்தி, அபெக்ஸ் இந்தியா நிறுவன நிர்வாகிகள் குமார், பக்தவத்சலு, கோபிநாத், விகேஎம் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பிச்சானந்தம், ஆசிரியர் டி.குமார், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை அனுராதா உள்பட பலர் கலந்து கொண்டனர். 
முன்னதாக, வில்வராயநல்லூர் கிராமத்தை அபெக்ஸ் இந்தியா நிறுவனம் தத்தெடுத்ததை அறிவிக்கும் பெயர் பலகையை திறந்து வைக்கப்பட்டது. மேலும், முதியோர் இல்லம், சிறுவர் இல்லம், ஆதரவற்ற மாணவர், மாணவிகள் இல்லம் ஆகியவற்றையும் ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்கள் பார்வையிட்டனர். 
பள்ளி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். அவர்கள் இருவரும் பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடல், கலைநிகழ்ச்சிகள், கிராம தேவதை பூங்குழலியம்மன் கோயில், ஆடி மாத ஊரணி பொங்கல் திருவிழாவிலும்  ஆகியவற்றில் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மன்ற நிர்வாகிகளும், அபெக்ஸ் இந்தியா நிறுவன நிர்வாகிகளும் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT