தமிழ்நாடு

இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பால் விலை உயர்வு

DIN

ஆவின் பால் விலை  உயர்வு திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தது.  அரசு அறிவிப்பின்படி பால் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று  5 ஆண்டுகளுக்குப் பிறகு விலை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. 

அதன்படி, கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 28-இல் இருந்து ரூ. 32-ஆக, அதாவது லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்பட்டுள்ளது. எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 35-இல் இருந்து ரூ. 41-ஆக அதாவது லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தி வழங்க தமிழக அரசு அறிவித்தது.

இவ்வாறு கொள்முதல் விலை உயர்த்தப் பட்டதால், விற்பனை விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த விலை உயர்வு திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது.  

உயர்த்தப்பட்ட பால் விலை எவ்வளவு?: இதன் காரணமாக இனி உயர்த்தப்பட்ட புதிய விலையில் ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படும்.  அதன்படி, இதுவரை ரூ. 22.50-க்கு விற்பனை செய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற "ப்ரீமியம்' பால் பாக்கெட் இனி ரூ. 25.50-க்கு விற்பனை செய்யப்படும். (மாதச் சந்தா அட்டைதாரர்களுக்கான விலை ரூ. 24.50).

இதுவரை ரூ. 20.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை நிற "கிரீன் மேஜிக்' பால் பாக்கெட் இனி ரூ. 23.50-க்கு விற்கப்படும். (மாத சந்தா அட்டைதாரர்களுக்கான விலை ரூ. 22.50).

இதுவரை ரூ. 18-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நீல நிற "நைஸ்' பால் பாக்கெட் இனி ரூ. 21.00-க்கு விற்பனை செய்யப்படும். (மாத சந்தா அட்டைதாரர்களுக்கான விலை ரூ. 20.00). இதுவரை ரூ. 17-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த "டயட்' பால் பாக்கெட் இனி ரூ.20-க்கு விற்பனை செய்யப்படும். (மாத சந்தா அட்டைதாரர்களுக்கான விலை ரூ. 19.50).

வெண்ணெய், நெய் விலையும் உயர்கிறது: பால் விலை உயர்வின் காரணமாக ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய் போன்ற பொருள்களின் விலையும் உயர்த்தப்படும் என ஆவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.

டீ, காபி விலை உயர்வு?: ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து, தனியார் பால் நிறுவனங்களும் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து டீ, காபி விலைகளை உயர்த்த டீக்கடைக்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT