தமிழ்நாடு

ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

DIN

ப.சிதம்பரம் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. மேலும், இந்த முறைகேட்டில் முக்கிய சதிகாரராக ப.சிதம்பரம் செயல்பட்டிருப்பது, வெளிப்படையாக தெரியவருகிறது; அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்த தீர்ப்பின் மூலம் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகளுக்கு இதுவரை இருந்து வந்த தடை நீங்கியுள்ளது. இந்நிலையில், சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரமணா, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வுக்கு பரிந்துரை செய்தார். 

இதனால் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனிடையே, அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமலாக்கத் துறை சிதம்பரத்துக்கு எதிராக லுக் அவுட் எனப்படும் தேடப்படும் நபர் என்ற நோட்டீஸை பிறப்பித்துள்ளது. இவ்விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைகளுக்கு அரசியல் காழ்ப்புணர்வே காரணம். காரணம், ப.சிதம்பரம் ஒரு சட்ட வல்லுனர், வழக்கை சட்டரீதியாகவே அவர் சந்திப்பார். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக நடத்தும் போராட்டத்தில் 14 எதிர்க்கட்சிகள் பங்கேற்கின்றன என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT