தமிழ்நாடு

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க அனுமதி வழங்கும் விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

DIN


செல்லிடப்பேசி கோபுரங்கள் அமைப்பது தொடர்பாக கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி அனுமதி வழங்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில்,  தனியார் நிறுவனம் செல்லிடப்பேசி கோபுரத்தை அமைத்துள்ளது. இந்த கோபுரத்துக்கு முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார் சப்தம் அந்தப் பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியோருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே செல்லிடப்பேசி கோபுரத்தை அந்தப் பகுதியில் இருந்து அகற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. 
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பது தொடர்பாக கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ள விதிகளைப் பின்பற்றி தனியார் நிறுவனம் கோபுரத்தை அமைத்துள்ளது. எனவே அந்த கோபுரத்துக்கு முறையாக அனுமதி கோரி தனியார் நிறுவனம், மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து 3 வார காலத்துக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தீர்ப்பளித்து வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT