தமிழ்நாடு

லோக் அதாலத் புறக்கணிப்பு: வழக்குரைஞர் சங்கம் முடிவு

DIN


வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை தவணை முறையில் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ள லோக் அதாலத்தை புறக்கணிக்க வழக்குரைஞர் சங்கம் முடிவு செய்துள்ளது. 
மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்களில் வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினரும், படுகாயமடைந்து பாதிக்கப்பட்டவர்களும் வழக்குத் தொடர்வார்கள். இந்த வழக்குகளில் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க உத்தரவிடப்படும். இழப்பீடு கோருபவர்களின் வங்கிக் கணக்கில் இழப்பீட்டுத் தொகை, வழக்குத் தொடர்ந்த நாளில் இருந்து கணக்கிடப்பட்டு வட்டியுடன் செலுத்தப்படும்.
இந்த நிலையில் ஒரு விபத்துக்கு 3 இழப்பீடுகள் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அண்மையில் பிறப்பித்த உத்தரவில், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை தவணை முறையில் வழங்க வேண்டும் என தீர்ப்பாயங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை அனைத்து நீதிமன்றங்களுக்கும், அறிவுறுத்த வேண்டும் என உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தீர்ப்பாயங்களில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில்,  லா அசோசியேஷன் தலைவர் எல்.செங்குட்டுவன் தலைமையில் அண்மையில் நடந்த கூட்டத்தில், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இழப்பீட்டுத் தொகையை தவணை முறையில் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை வாகன விபத்துகளுக்கு இழப்பீடு கோரும் வழக்குகள் தொடர்பாக வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் லோக் அதாலத்தில் வழக்குரைஞர்கள் பங்கேற்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT