தமிழ்நாடு

தமிழகத்திற்கு இன்று ரெட்.. நாளைக்கு ஆரஞ்ச்: வானிலை ஆய்வு மையத்தின் அடுத்தடுத்த அலர்ட்டுகள்

DIN

சென்னை: கனமழையின் காரணமாக தமிழகத்திற்கு ஞாயிறன்று ரெட் அலர்ட்டும், திங்களன்று ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது.

ஞாயிறன்று சென்னை மற்றும் தமிழ்கத்தின் 10 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் கனமழையின் காரணமாக தமிழகத்திற்கு ஞாயிறன்று ரெட் அலர்ட்டும், திங்களன்று ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையமானது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஞாயிறன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் ரெட் அலர்ட்டும், திங்களன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT