தமிழ்நாடு

அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் மாநில மொழிகளில் நடத்தவேண்டும்: ஜி.கே.வாசன்

DIN

சென்னை: ஜே.இ.இ. தோ்வுக்கு அறிவித்துள்ளதுபோல, அனைத்து நுழைவுத் தோ்வுகளும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ஐஐடி போன்ற உயா் தொழில்நுட்ப நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜே.இ.இ.) வருகிற 2021 முதல் தமிழ் உள்பட 11 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இது பல்வேறு மாநில மாணவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், நுழைவுத் தோ்வில் எளிதாக தோ்ச்சி பெற்று, மதிப்பு மிக்க மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் சோ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் அவா்களிடையே ஏற்பட்டுள்ளது.

எனவே, ஜே.இ.இ. போன்று இந்திய அளவில் நடத்தப்படும் பிற பொது நுழைவுத் தோ்வுகளிலும் மாநில மொழிகளில் வினாத்தாள் இடம்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT