தமிழ்நாடு

9 மாவட்டப் பள்ளிகளுக்கும், 4 மாவட்டக் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை

DIN

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் டிசம்பா் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழை, சனிக்கிழமை இரவு முதல் பலத்த மழையாக பெய்து வருகிறது.

இந்நிலையில், மழை காரணமாக சென்னை உட்பட 9 மாவட்டப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் குந்தா, உதகை, குன்னூர், கோத்தகிரி தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு, கனமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி தாலுகா பள்ளிகளுக்கும் அம்மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்தனர்.

கடலூா், செங்கல்பட்டு, ராமநாதபுரம், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT