தமிழ்நாடு

உண்ணாவிரதம் இருக்கும் முருகன், நளினி உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தகவல்

DIN

வேலூர் மத்திய சிறையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், நளினி ஆகியோரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் முடிவை தமிழக ஆளுநர் ஏற்கக்கோரி வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகனும், பெண்கள் சிறையில் அவரது மனைவி நளினியும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். 
முருகன், நளினியின் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்
கிழமையும் தொடர்ந்தது. இதனிடையே, முருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. அத்துடன், முருகன், நளினி ஆகியோரது உடல்நிலையை சிறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி வியாழக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முருகன் உண்ணாவிரதம் இருப்பது குறித்து 12ஆம் தேதியே முறைப்படி கடிதம் அளித்திருந்தார். நளினி 9ஆம் தேதி கடிதம் அளித்திருந்தார். எனினும், அவர்கள் இருவருக்கும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அவர்களின் உடல்நிலை நன்றாக உள்ளது. தொடர்ந்து சிறை மருத்துவக் குழுவினர் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர் என்றார் அவர்.
முருகனை அவரது வழக்குரைஞர் புகழேந்தி புதன்கிழமை இரவு சிறையில் சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறையில் தான் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தால் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளிக்க வேண்டும் என்று முருகன் கூறியதாக புகழேந்தி தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருக்கும் முருகன், நளினி உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பு: சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தகவல்
வேலூர், பிப்.14: வேலூர் மத்திய சிறையில் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் முருகன், நளினி ஆகியோரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வேலூர் சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அமைச்சரவையின் முடிவை தமிழக ஆளுநர் ஏற்கக்கோரி வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகனும், பெண்கள் சிறையில் அவரது மனைவி நளினியும் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். 
முருகன், நளினியின் உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்
கிழமையும் தொடர்ந்தது. இதனிடையே, முருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு குளுகோஸ் ஏற்றப்பட்டது. அத்துடன், முருகன், நளினி ஆகியோரது உடல்நிலையை சிறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதி வியாழக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: முருகன் உண்ணாவிரதம் இருப்பது குறித்து 12ஆம் தேதியே முறைப்படி கடிதம் அளித்திருந்தார். நளினி 9ஆம் தேதி கடிதம் அளித்திருந்தார். எனினும், அவர்கள் இருவருக்கும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. அவர்களின் உடல்நிலை நன்றாக உள்ளது. தொடர்ந்து சிறை மருத்துவக் குழுவினர் உடல்நிலையைக் கண்காணித்து வருகின்றனர் என்றார் அவர்.
முருகனை அவரது வழக்குரைஞர் புகழேந்தி புதன்கிழமை இரவு சிறையில் சந்தித்துப் பேசினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறையில் தான் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தால் உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக அளிக்க வேண்டும் என்று முருகன் கூறியதாக புகழேந்தி தெரிவித்தார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT