தமிழ்நாடு

மோடிக்கு கட்டுப்பட்டு அச்சத்தில் உறைந்திருக்கும் அரசு: திருமா தாக்கு

DIN

மதுரை: தமிழக அரசு மோடிக்கு கட்டுப்பட்டு அச்சத்தில் உறைந்திருக்கும் அரசாக  இருக்கிறது என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை வந்திருந்தார். அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்ததை எடுத்து காட்டுவதாக உள்ளது. அத்துடன்

புலனாய்வு களத்தில் மத்திய அரசு பலவீனமாக இருப்பதையுமிந்த சம்பவம்  எடுத்துக் காட்டுகிறது. எனவே சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உருவாக்கி, இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள மர்மங்கள் குறித்து ஆராய வேண்டும்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, எடப்பாடி தலைமையிலான அரசு பதவியை தக்க வைப்பதற்காக போராடி வருகிறது. இதன் காரணமாக பிரதமர் மோடிக்கு கட்டுப்பட்ட அரசாக அச்சத்தில் உறைந்து காணபப்டுகிறது.

மத்திய அரசின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு தமிழக அரசு சுதந்திரமாக செயல்படாமால் இருப்பது வேதனை தருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT