தமிழ்நாடு

18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி மனு: தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN


மதுரை: எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றக் கிளை, ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வேதா என்ற தாமோதரன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

பல்வேறு அரசியல் காரணங்களால் 18 எம்எல்ஏக்களை சட்டப்பேரவைத் தலைவர் தகுதியிழப்பு செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிராக 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என 18 பேரும் அறிவித்துள்ளனர். இச்சூழலில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி, புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய தேர்தல் ஆணைம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், 18 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 27 லட்சம் வாக்காளர்கள், தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளனர். 

எனவே, அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எம்எல்ஏக்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளார். 

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, மனு மீது பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT