தமிழ்நாடு

ஜெம் மருத்துவமனையில் வயிறு, உடல் உள்உறுப்புகள் கண்காட்சி

DIN


சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில் வயிறு, உடல் உள்உறுப்புகள் கண்காட்சி தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய தொழில் கூட்டமைப்பு தலைவர் எம். பொன்னுசுவாமி கண்காட்சியைத் திறந்து வைத்துப் பேசியது: 
பொதுமக்கள் மத்தியில் வயிறு, உடல் உள் உறுப்புகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் வயிறு 2.0 கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. உடல் உள் உறுப்புகள் குறித்தும்,அவை என்னென்ன நோய்களால் பாதிக்கப்படுகின்றன என்பதை உரிய மாதிரிகளுடன் விளக்கும் கண்காட்சி ஜனவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இந்த கண்காட்சி மூலம் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு, உடற் பயிற்சிகள் குறித்த முக்கியத்துவம், நோய்த் தடுப்பு, நலமான வாழ்வுக்குத் தேவையான சிகிச்சை முறைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்கும் என்றார் எம்.பொன்னுசுவாமி. ஜெம் மருத்துவமனை தலைவர் மருத்துவர் சி. பழனிவேலு, தலைமை செயல் அலுவலர் அசோகன், செயல் இயக்குநர் சங்கீத ப்ரியா, இயக்குநர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT