தமிழ்நாடு

தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் வருகை

DIN

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி பகுதிக்கு ஆஸ்திரேலிய நாட்டு பிளமிங்கோ பறவைகள் வரத் தொடங்கியுள்ளன.
தனுஷ்கோடிமன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பிளமிங்கோ பறவைகள் இனப்பெருக்கத்துக்காக அதிகளவில் வரும். இப்பறவைகள் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் இங்கு குவியும். இந்நிலையில், இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன. 20) ஆஸ்திரேலியாவில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பிளமிங்கோ பறவைகள் வந்துள்ளன. தற்போது இப்பறவைகள் கோதண்டராமர் கோயில், அரிச்சல்முனை, கம்பிபாடு உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த ஆழம் கொண்ட கடல் பகுதியில் மீன்கள், இறால் மீன்களை உணவாக வேட்டையாடி வருகின்றன.
இந்த ஆண்டு பிளமிங்கோ பறவைகளின் வருகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு பறவைகளை காண தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகளும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT