தமிழ்நாடு

​முல்​லைப் பெரி​யா​றில் நீர்​தி​றப்பு குறைப்பு: மின் உற்​பத்தி 30 மெகா​வாட்​டாக குறைந்​தது

DIN


முல்​லைப் பெரி​யாறு அணை​யி​லி​ருந்து திறக்​கப்​ப​டும் நீரின் அளவு செவ்​வாய்க்​கி​ழமை விநா​டிக்கு 300 கன அடி​யாக குறைக்​கப்​பட்​ட​தால், லோயர்​கேம்ப்​பில் மின் உற்​பத்தி 30 மெகா​வாட்​டாக குறைந்​தது.
முல்​லைப் பெரி​யாறு அணை​யின் நீர்ப்​பி​டிப்​புப் பகு​தி​க​ளில் போது​மான மழை இல்லை. இத​னால், அணை​யின் நீர்​மட்​டம் வெகு​வாக குறைந்து வரு​கி​றது. அணைக்கு செவ்​வாய்க்​கி​ழமை நில​வ​ரப்​படி நீர்​வ​ரத்து விநா​டிக்கு 48 கன அடி​யாக இருந்​தது. 
அணை​யின் நீர் மட்டம் 118.25 அடி​யாக இருந்​தது. அணை​யின் நீர் இருப்பு 2,312 மில்​லி​யன் கன அடி​யாக இருந்​தது. இத​னால் அணை​யி​லி​ருந்து வெளி​யேற்​றப்​ப​டும் நீரின் அளவு விநா​டிக்கு 300 அடி​யாக குறைக்​கப்​பட்​டது.
பெரி​யாறு அணை போர்பை டேமி​லி​ருந்து லோயர்​கேம்ப்​பிற்கு வரும் தண்​ணீர் மூலம் நான்கு மின்​னாக்​கி​கள் இயக்​கப்​பட்டு, தலா 42 மெகாவாட் வீதம் மொத்​தம் 168 மெகாவாட் மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​பட்​டது. தற்​போது விநா​டிக்கு 300 கன அடி தண்​ணீரே வெளி​யேற்​றப்​ப​டு​வ​தால், ஒரு மின்​னாக்கி மட்டும் இயக்​கப்​பட்டு 30 மெகாவாட் மின்​சா​ரம் மட்டுமே உற்​பத்தி செய்​யப்​ப​டு​கி​ற​து.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

ஆந்திர பேரவைத் தேர்தல்: ரோஜாவுக்கு பின்னடைவு

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

SCROLL FOR NEXT