தமிழ்நாடு

பொக்ரான் முதல் கார்கில் வரை வாஜ்பாய்க்கு துணை நின்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்:  தமிழிசை இரங்கல் 

பொக்ரான் சோதனை முதல் கார்கில் போர் வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணையாக நின்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: பொக்ரான் சோதனை முதல் கார்கில் போர் வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு துணையாக நின்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி பின்வருமாறு:

முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைந்த செய்தி மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது.

பொக்ரான் சோதனை முதல் கார்கில் போர் வரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு துணையாக நின்றவர். தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியவர். அவரின் மறைவு நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும்.

அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காகித வாக்குச் சீட்டுகளைக் கண்டு பாஜக பயப்படுவது ஏன்?: சித்தராமையா கேள்வி

செப். 18-இல் புதுவை சட்டப்பேரவை கூடுகிறது: ஆா்.செல்வம் அறிவிப்பு

கி(ளி)க்... சைத்ரா அச்சார்!

கடலூர் ரசாயனக் கசிவு விபத்து: பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஆலை நிர்வாகம் அலட்சியமா?

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா! சீனா படுதோல்வி!

SCROLL FOR NEXT