தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது எப்படி? முதல்வர் - மு.க.ஸ்டாலின் விவாதம்

DIN


மக்களவைத் தேர்தலில் திமுக எப்படி வெற்றிபெற்றது என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் நேருக்குநேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசியது:
மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு மகத்தான வெற்றியை மு.க.ஸ்டாலின் தேடித் தந்தார். 
தேர்தல் பிரசாரத்துக்குக்கூட சிலர் சுவர் ஏறி குதித்துச் சென்று வந்த நிலையில், மக்களோடு மக்களாக பிரசாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டார். 
திண்டுக்கல், திமுக வெற்றிபெறாத தொகுதியாக இருந்து வந்தது. அதில்கூட சாதாரண ஒருவரை  நிறுத்தி 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்துள்ளார் என்றார்.
அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குறுக்கிட்டு கூறியது:
அப்போது இருந்த சூழல் வேறு. இப்போது உள்ள சூழல் வேறு. அதே திண்டுக்கல்லில் நிலக்கோட்டைக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.
அமைச்சர் செல்லூர் ராஜூ: வெற்றியும் தோல்வியும் அரசியல் கட்சிகளுக்கு மாறி, மாறிதான் வரும். 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, நாட்டிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை ஜெயலலிதா மாற்றிக் காட்டினார். திமுக இப்போது கூட்டணி அமைத்துதான் வெற்றி பெற்றுள்ளது. அதனால், ஜெயலலிதாவின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: எப்படி வெற்றி பெற்றீர்கள் என அனைவருக்கும் தெரியும். விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி என உண்மைக்கு மாறான தகவல்களை மக்களிடம் பரப்பித்தான் வெற்றிபெற்றீர்கள். குழந்தைக்கு மிட்டாய்க் கொடுத்து ஏமாற்றி கடத்திச் செல்வதுபோல மக்களை ஏமாற்றி விட்டீர்கள்.
மு.க.ஸ்டாலின்:  எந்த அடிப்படையில், உண்மைக்குப் புறம்பானது என்று முதல்வர் சொல்கிறார் எனத் தெரியவில்லை. நாங்கள் சொன்னது வெற்றி பெற்று பொறுப்புக்கு வரும் நேரத்தில், அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்ற அடிப்படையில்தான் தேர்தல் நேரத்தில் கூறினோம். 
இப்போதும் சொல்கிறோம். விரைவில் ஆட்சிக்கு வருவோம். அப்போது  அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம். அதில், எந்தவித சந்தேகமும் வேண்டாம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வைப்புத் தொகையைக்கூட இழந்தது. அந்தக் கட்சியே தற்போது வெற்றி பெற முடியும் என்றால், எங்களாலும் வெற்றி பெற முடியும்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்துகொண்டு மக்களைத் தொங்கலில் விட்டது திமுகதான்.
மு.க.ஸ்டாலின்: தொங்கலில் இருப்பது அதிமுக ஆட்சி தான். அதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
அமைச்சர் ஜெயக்குமார்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டும் ஆட்சி அதிமுக ஆட்சிதான். 
2021 ஆண்டிலும் அதிமுகதான் ஆட்சிக்கு வரும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT