தமிழ்நாடு

மே மாதம் மட்டுமே பணியிட மாறுதல்: சத்துணவு பணியாளர்கள் வலியுறுத்தல்

DIN


 சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் நிறுவனர் மு.வரதராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:  சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக  செயல்பட்டு, பதவி உயர்வில் சென்ற பணியாளர், பணி ஓய்வு பெற்ற பிறகு வாழ்வாதார ஓய்வூதியம் இல்லாமல் முதுமை காலத்தில் தவிக்கும் அவநிலையில் உள்ளனர். முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று வாழ்வாதார ஓய்வூதியத்தை நிறைவேற்றி தர வேண்டும். பணி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும், சமையலர், உதவியாளர்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதார ஓய்வூதிய தொகை ரூ. 2 ஆயிரம் என்பதை மாற்றி உயர்த்தி வழங்க வேண்டும். அத்துடன் கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்படுவது போல் அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். 
ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர், ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போல் மருத்துவ காப்பீடு திட்டத்தை ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். சத்துணவுப் பணியாளர், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் மட்டுமே பணியிட மாறுதல், பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என சமூக நல இயக்குநரக அலுவலக உத்தரவிலேயே பிறப்பித்துள்ளது. 
இந்த ஆண்டு மே மாதம் அதற்கான பணிகள் நடைபெறவில்லை. அதை உடனடியாக அமல்படுத்திட வேண்டும் என  அதில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT