தமிழ்நாடு

பறவைகள் பாதிப்பு: ஆய்வாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கலாம்

DIN


பறவைகள் இறப்பு, பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம் என சலீம் அலி பறவைகள், இயற்கை வரலாறு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கையின் உயிர்நாடியாகவும், நிலம், நீர் என உணவுச் சங்கிலியின் அனைத்து நிலைகளிலும் வாழும் ஒரே உயிரினம் பறவைகள் மட்டுமே. பல்வேறு காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. ஒரு பறவை இறப்பு என்பது சுற்றுச்சூழல் பாதிப்பின் அறிகுறியாகும். இதைக் கருத்தில் கொண்டு மத்திய சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் நிதி உதவியுடன் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் பாதிக்கப்படும் பறவைகளைக் கண்காணித்தல், கண்டறிதல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், பாதிக்கப்படும் பறவைகளைச் சேகரித்து ஆய்வு செய்வதால், பாதிப்புகள் முன்கூட்டியே தடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதன்படி, பறவைகள் இறந்து கிடந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டிருந்தாலோ அவற்றைச் சேகரித்து  தெர்மாக்கோல் பெட்டியில்  குளிரூட்டப்பட்ட ஜெல்பேக் வைத்து பறவை இறந்து கிடந்த இடம், எப்போது இறந்தது என்ற தகவலோடு  எஸ்.முரளிதரன், முதுநிலை ஆய்வாளர், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வுப் பிரிவு, சலீம் அலி பறவைகள், இயற்கை வரலாறு ஆய்வு மையம்,  ஆனைகட்டி, கோவை-41 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இதற்கு செலவிடப்பட்ட தொகை சம்பந்தப்பட்டவருக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்படும். மேலும், தகவல்களுக்கு  0422 2203100,  2203124, 2203125 ஆகிய தொலைபேசி எண்கள் அல்லது ஆராய்ச்சியாளர் வெ.கிருபாநந்தினி 94887 53659 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT