தமிழ்நாடு

ஒசூரில் சர்வதேச மலர்கள் ஏல மையம்: முதல்வர் அறிவிப்பு

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஒசூரில் சர்வதேச மலர்கள் ஏல மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப் பேரவையில் விதி 110-இன் கீழ் அவர் வியாழக்கிழமை படித்தளித்த அறிக்கை:-

ஒசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க வேண்டுமென கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்ட விவசாயிகள், மலர் ஏற்றுமதியாளர்களிடம் இருந்து கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. அவர்களது கோரிக்கையை ஏற்று, சர்வதேச மலர்கள் ஏல மையம் ஒசூரில் அமைக்கப்படும். மின்னணு வசதியுடன் கூடிய ஏலக்கூடம், அலுவலகக் கட்டடம், குளிர்பதன அறை போன்ற வசதிகளுடன் ஏல மையம் உருவாக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

பாரமுல்லாவில் 35 ஆண்டுகளில் இல்லாத வாக்குப்பதிவு!

கரூாில் கனமழை!

பிரதோஷ நாளில்...

வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக பல கோடிகளை பெற்றுள்ளது ஆம் ஆத்மி: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT