தமிழ்நாடு

ஐ.எஸ் அமைப்புடன் கோவையைச் சேர்ந்த ஆறு இளைஞர்களுக்கு தொடர்பு?: என் .ஐ.ஏ விசாரணையில் தகவல் 

DIN

சென்னை:   ஐ.எஸ் அமைப்புடன் கோவையைச் சேர்ந்த ஆறு இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் இலங்கை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் என் .ஐ.ஏ விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.

இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தின் போது கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளைக் குறிவைத்து தொடர் வெடிகுண்டுகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

முன்னதாக பயங்கரவாதிகள் இலங்கையில் தாக்குதல் நடத்தலாம் என இந்தியா எச்சரித்தது. ஆனால் இலங்கை அலட்சியமாக இருந்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தகவல்கள் வெளியானது.

கோவையில் முன்பு கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் நடைபெற்ற விசாரணை அடிப்படையிலேயே இலங்கைக்கு தாக்குதல் தொடர்பாக இந்தியா எச்சரிக்கையை விடுத்துள்ளது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஐ.எஸ் அமைப்புடன் கோவையைச் சேர்ந்த ஆறு இளைஞர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் இலங்கை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் என் .ஐ.ஏ விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.

கோவையில் 7 இடங்களில் தேசிய புலனாய்வு பிரிவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது. சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. 6 பேரை தீவிர விசாரணை வளையத்திற்குள் தேசிய புலனாய்வு பிரிவினர் கொண்டு வந்துள்ளனர்.

கோவை சோதனையில் 14 மொபைல் போன்கள், 29 சிம் கார்டுகள், 10 பென் டிரைவ்கள், 3 லேப் டாப்கள், 6 மெமரி கார்டுகள், 4 ஹார்ட்டி ஸ்க், பிரசார துண்டு காகிதங்கள் மற்றும் பிற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

இவர்கள் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும், அத்துடன் இலங்கை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகளுடன் இவர்கள் ஆறு பேரும் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பில் இருந்ததாகவும் என் .ஐ.ஏ விசாரணை முடிவில் வெளியிட்ட அறிக்கை மூலம் தகவல் தெரிய வந்துள்ளது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT