தமிழ்நாடு

குரூப் 4: அறிவிப்பாணையோடு மற்றொரு முக்கிய விஷயத்தை சொல்லியிருக்கும் டிஎன்பிஎஸ்சி

DIN

 
சென்னை: தமிழகத்தில் 6,491 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பாணையோடு மற்றொரு முக்கிய விஷயத்தையும் டிஎன்பிஎஸ்சி சொல்லியிருக்கிறது.

செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ள குரூப் 4 தேர்வுக்கு இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (www.tnpsc.gov.in)  இணையதளத்தில் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 பிரிவுக்குள் வருகின்றன.

இந்த அறிவிப்பாணையில், தேர்வு குறித்த விவரங்களோடு, தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு அறிவுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, தேர்வாணையத்தில் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படும். பொய்யான வாக்குறுதி வழங்கி தவறான வழியில் வேலை வாங்கி தருவதாகக் கூறும் இடைத் தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT