தமிழ்நாடு

மதுரை தனியார் கல்லூரியில் ராகிங்: விஷம் குடித்த 2 மாணவர்கள் அடுத்தடுத்து  பலி

DIN

மதுரை: மதுரையில் தனியார் கல்லூரி மாணவர்கள் ராகிங் கொடுமையால் விஷம் அருந்திய மாணவர்கள் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜா தனியார் கல்லூரியில் பி.ஏ (பொருளாதாரம்) முதலாம் ஆண்டு படித்து வந்தவர்கள் முத்துப்பாண்டி மற்றும் பரத். இந்த நிலையில் அதே கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு படித்து வரும் திருப்புவனத்தை சேர்ந்த ஜெய்சக்தி என்ற மாணவன் ராகிங் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துப்பாண்டி, பரத் இருவரும் கடந்த 2 ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு தீவிர சிகிச்சையில் இருந்த பரத் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்த நிலையில், இன்று காலை முத்துப்பாண்டியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ராகிங் கொடுமையால் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் ராகிங் செய்ததாக கூறப்படும் அதே கல்லூரியை சேர்ந்த ஜெய்சக்தி என்ற மாணவன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தனியார் கல்லூரியில் ராகிங் கொடுமையால் அடுத்தடுத்து 2 மணவர்கள் விஷம் அருந்தி உயிரிழந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மாணவர்கள் தற்கொலை தொடர்பாக கல்லூரி முதல்வர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT