தமிழ்நாடு

வைகோ இப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: கலாய்த்த கலைஞரின் பேரன்

மதிமுக பொதுச்செயலாளரான வைகோ இப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அழகிரியின் மகன் துரை தயாநிதி கிண்டல் செய்துள்ளார்.

DIN

சென்னை: மதிமுக பொதுச்செயலாளரான வைகோ இப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அழகிரியின் மகன் துரை தயாநிதி கிண்டல் செய்துள்ளார்.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக  போட்டியிடுகிறது.

அக்கட்சிக்கு ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியும் மாநிலங்களவை சீட் ஒன்றும் அக்கூட்டணியில் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஈரோடு தொகுதியில் கணேசமூர்த்தி வேட்பாளராகப் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ இப்படிச் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று அழகிரியின் மகன் துரை தயாநிதி கிண்டல் செய்துள்ளார்.

இதுதொடர்பாக துரை தயாநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் புதன் இரவு வெளியிட்டுள்ள பதிவொன்றில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டின் நம்பகமான அரசியல்வாதியான வைகோ, மதிமுகவை தேர்தலுக்குப் பிறகு திமுகவுடன் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இவ்வாறு பதிவிட்டுள்ள தயாநிதி அழகிரி அதற்கு கீழே ஆமை ஒன்று வீட்டுக்குள் போவது போல படத்தையும் சேர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: கேரள அரசு தீர்மானம் நிறைவேற்றம்!

பாகிஸ்தான் வீரர்கள் நிறைய பேசினார்கள், நான் பேட்டினால் பதிலளித்தேன்: திலக் வர்மா

பிரபாஸின் ராஜா சாப் டிரைலர்!

ரிசர்வ் வங்கி வட்டி விகித முடிவை முன்னிட்டு பங்குச் சந்தைகள் சரிந்து நிறைவு!

அலைமேல் டால்பின்... ருக்மணி வசந்த்!

SCROLL FOR NEXT