தமிழ்நாடு

ரூ.94 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்

DIN

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே  வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.94 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும்படையினர் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அந்தியூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் தங்கம், வெள்ளி நகைகள் இருந்ததும், அவற்றுக்கு உரிய ஆவணம் இல்லாததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பறக்கும்படை அதிகாரிகள் அந்த வேனை உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
பின்னர், வேனில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் மதிப்பிடப்பட்டன. அதில் தலா இரண்டு பெட்டிகளில் 5,900 கிராம் தங்க நகைகளும், 6,340 கிராம் வெள்ளி நகைகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றில் தங்கம் ரூ.92 லட்சத்து 23 ஆயிரம், வெள்ளி ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வேனில் வந்த, சேலத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமாரிடம் (23) வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT