தமிழ்நாடு

தோல்வி பயத்தாலேயே தேர்தல் ஆணையம் மீது திமுக குற்றச்சாட்டு

DIN


தோல்வி பயத்தாலேயே தேர்தல் ஆணையம் மீது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன என்றார், பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தருவைக்குளம் மீனவக் கிராமத்தில் அவர் படகில் கடலுக்குச் சென்று, அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தோரிடம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் பெ. மோகன் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மீனவ மக்களுக்கு அதிமுக அரசு எப்போதும் துணை நின்று வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் கட்சி நடத்த டிடிவி தினகரனுக்கு தகுதி கிடையாது. 2006ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர்தான் தினகரன். அதிமுகவை அவர் உடைக்கப் பார்த்தபோது முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி சரியான நேரத்தில் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றினார். ஜெயலலிதா உயிரைக் கொடுத்து உருவாக்கிய இந்த ஆட்சியை மக்களாட்சியாக எடப்பாடி கே. பழனிசாமி சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
அதிமுக ஆட்சியை அகற்ற திமுகவுடன் இணைந்து தினகரன் சதிசெய்து வருகிறார். மக்கள் ஆதரவோடு செயல்படும் அதிமுக அரசை அசைத்துப் பார்க்க அவரால் முடியாது. 
திமுகவுக்கு தோல்வி உறுதி எனத் தெரிந்துவிட்டதால், அதிமுகவோடு தேர்தல் ஆணையம் கூட்டணி என ஸ்டாலின் குற்றஞ்சாட்டுகிறார். தோல்வி பயத்தாலேயே தேர்தல் ஆணையம் மீது அவர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதிமுக அரசுக்கு தேர்தல் ஆணையம் எவ்வகையிலும் ஆதரவாக செயல்படவில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT