தமிழ்நாடு

புதிய ஆலைகளுக்கான கட்டட அனுமதி: களஆய்வு அறிக்கைக்கு கால நிர்ணயம்

DIN


புதிய ஆலைகளுக்கான கட்டட அனுமதி பெற மேற்கொள்ளப்படும் களஆய்வு அறிக்கையை 48 மணி நேரத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென நகர் மற்றும் ஊரமைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. 
இதுகுறித்து, அந்தத் துறை வெளியிட்ட உத்தரவு:
வணிக நடைமுறைகளை எளிதாக்கும் சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, தொழிற்சாலைகளை கட்டமைப்பதற்கான கட்டட ஒப்புதல்களை நகர் மற்றும் ஊரமைப்புத் துறையிடம் இருந்து பெற வேண்டும். இவ்வாறு பெறப்படும் ஒப்புதலானது துறையின் களஆய்வுக்குப் பிறகே அளிக்கப்படுகிறது. இந்த களஆய்வு மேற்கொண்ட பிறகு, அதற்கான அறிக்கை துறையின் சார்பில் அளிக்கப்படும். களஆய்வை மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கையைத் தயார் செய்த பிறகு 48 மணி நேரத்துக்குள்ளாக  அதனை நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு செய்த மூத்த அரசியல் தலைவர்கள்

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT