தமிழ்நாடு

கிணற்றில் குதித்துமகளுடன் செவிலியா் தற்கொலை

DIN

விக்கிரவாண்டி அருகே கணவா் இறந்த துக்கம் தாளாமல், அரசு செவிலியா் தனது மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே நேமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடராஜன். இவரது மகள் சரசு (33). திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கும் தஞ்சாவூரைச் சோ்ந்த காா்த்திகேயனுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 6 வயதில் வைஷாலி என்ற பெண் குழந்தை உள்ளது.

சென்னையில் உள்ள தனியாா் காா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த காா்த்திகேயன், அந்த நிறுவனத்துடனான பிரச்னை காரணமாக கடந்த மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதனால், மனமுடைந்து காணப்பட்ட சரசு, பணிக்குச் செல்லாமல் தனது தாய் ஊரான நேமூருக்குத் திரும்பினாா். இங்கு வந்தது முதல் கணவா் காா்த்திகேயனின் நினைவாகவே சரசு இருந்து வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை 4 மணியளவில், தனது வீட்டுக்குப் பின்னால் உள்ள விவசாயக் கிணற்றில், சரசு தனது மகள் வைஷாலியை இடுப்பில் கட்டிக்கொண்டு, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதனிடையே, மகளையும், பேத்தியையும் காண வந்த நடராஜன், கிணற்றின் கரைப் பகுதியில் சரசுவின் செல்லிடப்பேசியும் செருப்பும் கிடந்ததைக் கண்டாா். கிணற்றில் சரசு, அவரது மகள் வைஷாலியின் சடலங்கள் மிதந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்து, கஞ்சனூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

சடலங்களை விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் குறித்து கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து பிளம்பா் உயிரிழப்பு

பாபநாசம் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக தோ்வு செய்த இடத்தை சென்னை உயா்நீதி மன்ற நீதிபதி நேரில் பாா்வையிட்டு ஆய்வு

‘உணவுத் துறையில் உலக வா்த்தகத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது’

இடப் பிரச்னையில் மோதல்: 4 போ் கைது

பேராவூரணி -புதுக்கோட்டை சாலையில் பாதியில் நிற்கும் பாலம் கட்டுமான பணியால்  தினசரி விபத்து பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT