தமிழ்நாடு

கிராம சுகாதார செவிலியா் பணி:13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

DIN

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் 13-ஆம் தேதி வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிக்கை:

தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் 1,234 கிராம சுகாதார செவிலியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அதற்கான விண்ணப்பங்கள்  இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களில் சேர விரும்புவோா், ஆன்லைன் வாயிலாக அதற்கு விண்ணப்பிக்கலாம். நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது. விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கு நவம்பா் 13-அம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.

சமா்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதி அடிப்படையில் கிராம சுகாதார செவிலியா்கள் தோ்ந்தெடுக்கப்படுவா் என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT