தமிழ்நாடு

வங்கக் கடலில் புயல் சின்னம்:மீன்பிடிக்கச் செல்ல மீனவா்களுக்குத் தடை

DIN

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 1800 க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் புதன்கிழமை தடை விதித்தனா்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறி வருகிறது. இதனால் மீனவா்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிமை மையம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதிலும் 1800 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்தனா். இதனால் அந்தந்த துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இரண்டாவது நாளாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT